search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி கொண்டாட்டம்"

    கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி மதுகுடித்து ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    கோவை பாப்பநாயக்கன்பாளையம் பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர்கள் முருகானந்தம் (57), சக்திவேல் (61). இவர்கள் 3 பேரும் பெயிண்டர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நண்பர்களான இவர்கள் 3 பேரும் மதுவிருந்துடன் கொண்டாட முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த 3-ந் தேதி இரவு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபான பாட்டில்களை வாங்கினர். பின்னர் பட்டத்தரசியம்மன் கோவில் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு சென்றனர். அங்கு வைத்து 3 பேரும் இரவு முதல் விடிய விடிய மதுகுடித்ததாக தெரிகிறது.

    பின்னர் காலை 8 மணியளவில் 3 பேரும் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டனர். வீட்டிற்கு செல்லும் வழியில் திடீரென்று சக்திவேல் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார்.

    சிறிது நேரத்தில் வீட்டுக்கு செல்லும் வழியில் முருகானந்தம், பார்த்திபன் ஆகியோரும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து இறந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்து அவர்களது குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், 3 பேரும் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதனர். இது காண்போரை கண்கலங்க செய்தது.

    ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் இறந்தது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    3 பேரும் கள்ளச்சாராயம் குடித்து இறந்து இருக்கலாம் என்று அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    பிரேத பரிசோதனையில், 3 பேரும் அதிக போதைக்காக விஸ்கியில், பெயிண்டுக்கு கலக்கும் தின்னரை கலந்து குடித்தது தெரியவந்துள்ளது. இதனால் தொண்டையில் இருந்து வயிறு வரை அரிப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

    கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி மதுகுடித்து ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்கின்றனர்.

    இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த நன்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, பலகாரங்கள், உணவுப் பொருட்களை இறைவனுக்கு படைத்து வணங்குவார்கள்.

    பட்டாசுகளை வெடித்தும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்புகள் வழங்கியும், தீபாவளி வாழ்த்தினை பகிர்ந்தும் இப்பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். பெரும்பாலான மக்கள் கோவில்களுக்கு சென்று இறைவனை வணங்குவர்.

    திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள்

    அவ்வகையில் தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலையிலேயே தீபாவளி களைகட்டத் தொடங்கியது. காலையில் எழுந்து நீராடிவிட்டு பூஜைகள் செய்து, புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கோவில்களுக்கு சென்றும் பலர் வழிபாடு செய்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்கின்றனர். 

    தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் பட்டாசு வெடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். 


    நரகாசுரன் கிருஷ்ணர் வதம் செய்ததை நினைவுபடுத்தும் வகையில், வடமாநிலங்களில் நரகாசுன் உருவ பொம்மைகளை எரித்து தீபாவளி கொண்டாடுகின்றனர். கோவா மாநில தலைநகர் பனாஜியில் இன்று நரகாசுரன் உருவ பொம்மைகளுக்கு தீவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். 

    கொரோனா பெருந்தொற்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக இருந்தபோதிலும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து பலர் இன்னும் மீளவில்லை. எனவே ஒருசில பகுதிகளில் பொதுமக்கள் எளிமையாக தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

    அயோத்தி அனுமன் கோவில்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலுக்குள் பக்தர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு இடங்களில் தனிமனித இடைவெளியின்றி மக்கள் செல்வதை பார்க்கமுடிகிறது. 

    இதேபோல் உலகம் முழுவதிலும் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர். 
    குஜராத் மாநிலம், வதோதரா நகரில் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 5 ஆயிரம் சதுரடியில் 30 பேர் உருவாக்கிய ரங்கோலி கோலம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. #Rangoli #VadodaraRangoli
    அகமதாபாத்:

    தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் நேற்றிரவு மூன்று லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றிய தீபோத்சவம் நிகழ்ச்சி உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் பதிவானது.

    இந்நிலையில், குஜராத் மாநிலம், வதோதரா நகரில்  தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 5 ஆயிரம் சதுரடியில் 30 பேர் உருவாக்கிய ரங்கோலி கோலம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.



    மகாராணி சிம்னாபாய் பள்ளியில் ஏக்தந்த் ரங்கோலி கலாக்கர் என்ற குழுவை சேர்ந்த 30 பேர் சுமார் ஐந்தரை மணிநேர உழைப்பில் இந்த மெகா ரங்கோலி கோலம் உருவாக்கப்பட்டுள்ளது. #Rangoli  #VadodaraRangoli 
    அயோத்தியில் நடைபெற உள்ள தீபாவளி கொண்டாட்டத்தின் இறுதி நாளான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபரின் மனைவி பங்கேற்க உள்ளார். #Ayodhya #DiwaliCelebrations #KoreasFirstLady
    லக்னோ:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீப உற்சவம் நடைபெறுகிறது. இதில் உபி கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்த கொண்டாட்டத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜேன் இன் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்க உள்ளார். இவர் மூன்றாவது நாள் நடைபெற உள்ள பிரமாண்ட தீப உற்சவத்தில் பங்கேற்கிறார். அன்றைய தினம் சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும்.



    சிறப்பு விமானம் மூலம் 5ம் தேதி லக்னோ வந்து சேருகிறார் கிம் ஜங்-சூக். அவருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரிக்கிறார். மறுநாள் (6-ம் தேதி) தனது குழுவினருடன் லக்னோவில் இருந்து அயோத்திக்கு செல்லும் கிம் ஜங்-சூக், சரயு நதிக்கடையில் நடைபெறும் தீப உற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    பின்னர், ராணி ஹர் ஹூவாங்-ஓக் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் கிம் ஜங்-சூக். அயோத்தி இளவரசியான சூரிரத்னா தென் கொரியா சென்று அந்நாட்டு மன்னரை மணந்தபின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    உ.பி.யில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கிம் ஜங்-சூக் 7-ம் தேதி காலை சிறப்பு விமானம் டெல்லி சென்று, அங்கிருந்து கொரியாவுக்கு புறப்படுகிறார்.

    தென் கொரிய அதிபரின் மனைவி வருகையையொட்டி அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  #Ayodhya #DiwaliCelebrations #KoreasFirstLady

    ×